தினபலன்
கன்னி - 10-02-2023
இன்று உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள்.
ஹஸ்தம்: முன்னேற்றம் காணப்படும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5, 6