தினபலன்
கன்னி - 12-04-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.மருத்துவ செலவு குறையும். பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும்.
ஹஸ்தம்: பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6