
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
ஹஸ்தம்: யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.
சித்திரை 1, 2 பாதங்கள்: தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9