தினபலன்
கன்னி - 19-04-2023
இன்று வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் அலைச்சலை தரும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும்.
ஹஸ்தம்: சிலருக்கு திருமணம் கைகூடும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5