தினபலன்
கன்னி - 20-04-2023
இன்று பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: தேவையான நிதியுதவி கிடைக்கும்.
ஹஸ்தம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
சித்திரை 1, 2 பாதங்கள்: நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6