
இன்று ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும்.
ஹஸ்தம்: பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.
சித்திரை 1, 2 பாதங்கள்: மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5