தினபலன்
கன்னி - 26-04-2023
இன்று தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். வெளியில் தங்கும் சூழல் உருவாகும். எடுத்த காரியத்தை செய்யும் போது எதுசரி, எதுதவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள்.சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும்.
ஹஸ்தம்: எந்த ஒரு சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
சித்திரை 1, 2 பாதங்கள்: அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9