பகவான் கண்ணனுக்கு முடி காணிக்கை செலுத்திய தலம் எது தெரியுமா?

பகவான் கண்ணனுக்கு முடி காணிக்கை செலுத்திய தலம் எது தெரியுமா?

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் அம்பாஜியில் உள்ள அம்பே மா கோவில் இங்கு ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே முடி காணிக்கை செலுத்தும் நடைமுறையில் உள்ளது.

பகவான் கண்ணனுக்கு மூன்று வயதானபோது முடி காணிக்கை இந்த இடத்தில் தான் செலுத்தினார்களாம்.

மகிஷாசுரன் என்னும் அரக்கன் எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என அக்னி தேவனிடம் வரம் பெற்றான். அதன் பின், ஆணவத்துடன் தேவர்களை எல்லாம் துன்புறுத்தினான். வரத்தின் பலத்தால் அரக்கனை கொல்ல முடியாத தேவர்கள் பகவதி அம்மனை சரணடைந்தனர். போருக்கு சென்ற பகவதி அசுரனை கொன்ற பின் இங்கு அம்பாஜி அம்பேமா என்னும் பெயரில் அருள் புரிய தொடங்கினாள்.

கருவறையில் சிங்க வாகனத்தின் மீது அம்மன் அமர்ந்திருப்பது போல இருந்தாலும், உண்மையில் அம்மன் சிலைகள் கிடையாது. ஸ்ரீ யந்திரம் என்னும் தகட்டினை மார்பில் பிளேட்டில் பொருத்தி நகைகளால் அலங்கரித்து உள்ளனர். இந்த யந்திரத்தை தரிசித்தால் செல்வம் பெருகும். ஆமை ஒன்றின் மீது எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதில் 51 மந்திரங்கள் உள்ளன அட்சரங்கள் உள்ளன.

இந்த கோவிலில் நவராத்திரி, விஜயதசமி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது

அம்பே மா அல்லது சச்சார் சவுக்காலி என அம்மனை அழைக்கின்றனர். கோபுரத்தின் உச்சியில் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிள் கல்லால் ஆன  கலசம் உள்ளது. மூவாயிரம் கிலோ தங்கத்தால் கலசம் மூடப்பட்டுள்ளது.

கருவறையின் எதிரில் உள்ள பள்ளத்தில் நாகேஸ்வரர் அனுமன் நாகராஜர் சன்னதிகள் உள்ளன பக்தர்களே அபிஷேகம் செய்து மலர்கள் தூவி இங்கு அர்ச்சனை செய்யலாம் குங்குமம் லட்டு பிரசாதமாக தருகின்றனர்.

அமைவிடம் அகமதாபாத்தில் இருந்து 172 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com