
500 ஆண்டுகளுக்கு முன்பு குரு நானக் தேவ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதம் சீக்கிய மதம் பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த குரு நானக் தனது 50ஆவது வயதில் கிபி 1526ல் சீக்கிய மத போதனைகளை வெயிட்டார். தற்போது அது உலகின் ஐந்தாவது பெரிய மதம்.
சீக்கியர்களின் வீரமும், தியாகமும், பொறுப்பும், மதப் மற்றும் உலகப் பிரசித்தி பெற்றது. அவர்கள் புனிதமாக கருதும் நாள் செப்டம்பர் 2. காரணம், அன்றுதான் சீக்கியர்கள் இறைவனுக்கு சமமாக கருதப்படும் வேத நூல் ‘ஸ்ரீ குரு கிரந்த் சாகிப்’ அறிமுகமான நாள். ‘குருத்துவாரா’ எனப்படும் சீக்கிய வழிபாட்டு தலங்களில் இந்த நூல் மட்டுமே உள்ளது. ஆலயத்தின் மூலவரும், வழிபாடு செய்யப்படும் கடவுளும் இந்த புனித நூல் மட்டுமே. இதை ஆதி கிரந்தம் என்றும் அழைக்கிறார்கள்.
1469ம் ஆண்டு தோன்றியவர் குரு நானக் தேவ். சீக்கியர்களின் முதல் தலைவரும், முதல் குருவும் இவரே. இவர்தான் மதம், இனம், மொழி வேறுபாடுகளற்ற ஒரு மானுடத்தை உருவாக்க விரும்பி ஒரு மதத்தை உருவாக்கினார். அதுதான் 'சீக்கிய மதம்'. உலகிலுள்ள நல்ல தன்மைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் எப்போதும் சீக்கிய மதத்தினர்கள், சீடர்கள் என்ற நிலையில் இருந்து பணிவுடன், தங்களை அர்ப்பணிப்பாளர்களாக விளங்குவர் என்ற பொருளில்தான், தான் தோற்றுவித்த மதத்திற்கு ‘சீக்காஷ்’ (சீடர்கள்) என்ற பொருத்தமான பெயரை சூட்டி மகிழ்ந்தார்.
சீக்கிய மதம் 1506ம் ஆண்டு வாக்கில் தோன்றியபோது இந்தியாவில் மொகலாயர்கள் ஆட்சி செய்து வந்தனர். இதனால் அவர்களுக்கும், சீக்கிய மதத்தினர்களுக்கும் இடையே பயங்கர கலவரம் மூண்டது. இதற்கு முக்கிய காரணம் சீக்கிய மத போதனைகளை பின்பற்றி பல இந்துமத மற்றும் இஸ்லாமிய மதத்தவர்கள் சீக்கிய மதத்தில் இணைந்ததுதான். இதன் காரணமாக குரு நானக் தேவ்க்கு பின் வந்த இரண்டு சீக்கிய குருக்கள் மொகலாய மன்னர்களால் கொல்லப்பட்டனர்.
சீக்கிய மதத்தின் 10தாவது குருவாக வந்த குரு கோவிந்த் சிங் 1699ல் மதத்தின் சுதந்திரத்தை காப்பாற்றும் கட்டளையாக 'கல்சா' வை உருவாக்கினார். இவர் தான் இனிமேல் சீக்கிய மதத்திற்கு குருக்கள் கிடையாது. குரு கிரந்த் சாகிப் புனித நூலே இனி எல்லாம் என்ற நிலையை உருவாக்கியவர். 1469 முதல் 1708 வரையிலான சீக்கிய குருக்களால் தொகுப்பட்ட மத போதனைகளை கொண்ட நூல்தான் ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் என்ற புனித நூல். இது 1430 பக்கங்களைக்கொண்டது.
10வது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்தான் சீக்கியர்களின் அடையாளங்களாக வெட்டாத தலைமுடி, அதனை சீவ சிறு சீப்பு, அதனை மறைக்க தலைப்பாகை என அறிமுகப்படுத்தியவர். சீக்கிய ஆண்களுக்கு 'சிங்' என்றும் பெண்களுக்கு 'கவுர்' என்ற அடையாளத்தையும் அறிமுகப்படுத்தியவர்.
சீக்கியர்களின் புனித கோவிலான 'பொற்க்கோவில்' பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ளது. இது சீக்கியர்களின் 5 வது குருவான ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் என்பவரால் கட்டப்பட்டது. ஆதிகிரந்த்தின் பெரும் பகுதியை தொகுத்தவரும் இவரே. இங்கு தரையின் நடுவில் தங்க ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆதி கிரந்தம் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. இது 24 மணி நேரமும் திறந்திருக்கும் கோயில். உலகில் பார்க்க வேண்டிய 50 இடங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது கோயில் இந்த பொற்கோயில்.
சீக்கிய மதத்தைத்தோற்றுவித்த குரு நானக் தன்னலமற்ற சேவையும், கடின உழைப்பும் பிரார்த்தனை அளவுக்கு முக்கியமானது என்று அறிவுறுத்தினார். சீக்கியர்கள் குருத்வாராவுக்கு செல்லும்போது புனித நூலின் முன்பு பிரார்த்தனை செய்வார்கள், இப்போதைய நிலைக்கு நன்றி தெரிவிப்பார்கள். சீக்கிய கோயில்கள் வழிபாட்டு தலங்கள் மட்டும் அல்ல, வீடற்றவர்களுக்கான தங்குமிடங்களாகவும், சமூகத்தளங்களாகவும் இருக்கின்றன.
சீக்கியர்களின் அன்றாட வழிபாட்டில் இரு வேண்டுதல்கள் உண்டு. ஒன்று 'ஸர்பத்தா பல்லா'. இதன் பொருள் ‘அனைவருக்கும் ஆன நல்வாழ்வு’. இதை வேண்டிக்கொள்வதன் மூலம் உலகில் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறார்கள். இதனால்தான் குருத்துவாராக்களில் அனைவரும் வழிபட முடிகிறது. சீக்கிய மதத்தை பொறுத்தவரை ஏழை, பணக்காரன் எல்லாம் கிடையாது. அனைவரும் சமம் என்பதுதான்.
இரண்டாவது 'சர்தி காலா'. முடிவற்ற நேர்மறை எண்ணம் என்பது பொருள். குருத்வாராவில் வழிபடும்போது, திருமணம் மற்றும் விழாக்களின்போது, வாழ்க்கையில் பிரச்சினை வரும்போது சீக்கியர்கள் இந்த இரண்டு வார்த்தைகளை சொல்லிக்கொள்வார்கள்.
கடவுளுக்கு சமமாக கருதப்படும் குரு கிரந்த் சாகிப் நூலை 4 ஆண்டுகளில் குர்மித்சிங் என்ற 68 முதியவர் முழுக்க முழுக்க தன் கைகளால் எழுதி சாதனை படைத்தார். இந்த நூல் ஆதி கிரந்தம் வெளியான 401 வது ஆண்டு விழாவில் அமிர்தசரசில் வெளியிடப்பட்டது.