பக்தர்களுக்கு அருளும் மயிலை முண்டகக்கண்ணி அம்மன்!

பக்தர்களுக்கு அருளும் மயிலை முண்டகக்கண்ணி அம்மன்!

யிலாப்பூர் லஸ்ஸிலிருந்து சாந்தோம் செல்லும் சாலையில் இடது புறம் பெரிய வளைவு காணப்படும். இந்த வழியே செல்ல இரண்டே நிமிடங்களில் இக்கோவிலை அடையலாம். அம்மன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். கோயிலின் உள்ளே அரச மரங்கள் உள்ளது. அதற்கு கீழே விநாயகரும் நாகர் சிலைகளும் உள்ளன. அம்மன் சன்னதிக்கு பின்புறம் விழுதுகள் இல்லாத அபூர்வமான கல்லால மரமும், மூன்றடி கல் நாகமுடன் கூடிய புற்றும் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் இந்த கல்லால மரம் தான்.

இந்தக் கோவில் இருக்கும் இடத்தில் முன்பு குளம் ஒன்று இருந்ததாகவும் அதன் கீழ் சுயம்புவாக தோன்றியவள் தான் இந்த அன்னை என்றும் கூறப்படுகிறது.

இங்கு அம்மன் தாமரை மொட்டு வடிவில் சுயம்புவாக காட்சி தருகிறாள். முண்டகம் என்றால் தாமரை. எனவே இவள் முண்டகக் கண்ணி அம்மன் என போற்றப் படுகிறாள். இவள் அபிஷேக நேரம் போக மற்ற நேரங்களில் சந்தன காப்பில் வெள்ளியில் இரண்டு கைகளும் பொருத்தி அழகான வடிவில் காட்சி தருகிறாள்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் இது. ரேணுகா தேவியின் அவதாரங்களுள் ஒன்றாகவும், சப்த கன்னிகைகளில் ஒருவராகவும் போற்றப்படுகிறாள். மயிலையின் காவல் தெய்வமாக திகழ்பவர்கள் இந்த முண்டக்கண்ணி அம்மனும், கோலவிழி அம்மனும்தான்.

இந்த சுயம்புவான அம்மனுக்கு கருவறைக்கு மேலே கட்டிடம் எதுவும் கிடையாது. தாமரை மலர் போன்ற கண்களை உடையவள் என்றும் தாமரை மொட்டு வடிவத்தில் சுயம்புவாக வெளிப்பட்டதாலும் இவளை முண்டகக்கண்ணி என தலபுராணம் கூறுகிறது. 

கண் தொடர்பான நோய்கள் தீரவும், ராகு கேது தோஷம் நீங்கவும் வழிபட வேண்டிய அம்மன். நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் சிலையை பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு ஆடி மாதமும், தை மாதமும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஆடி, தை மாதங்களில்  வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைப்பதும், பூச்சொரிதல் விழாவும் விசேஷமாக நடைபெறுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக அருள்பாலிக்கிறாள் இந்த முண்டகக்கண்ணி அம்மன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com