உடல் உபாதை தீர்க்கும் திங்கட்கிழமை வழிபாடு!

உடல் உபாதை தீர்க்கும் திங்கட்கிழமை வழிபாடு!

ன்றைய உணவுப் பழக்க வழக்க முறைகளே குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல் ஆரோக்கிய சீர்கேட்டுக்கும் காரணமாக இருகிறது. அந்தக் காலத்தில் இருந்த உணவுப் பழக்க வழக்கங்களை மறந்ததும், நாகரிகம் என்ற பெயரில் முன்னோர்கள் சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிக்காமல் விட்டதும்தான், இன்று பலரது உடல் ஆரோக்கியம் கெட்டுப்போனதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. தீராத நோய் தீருவதற்கும் உடல் ஆரோக்கியம் பெறுவதற்கும், மருந்து மாத்திரை சாப்பிடுவதை குறைப்பதற்கும் ஆன்மிகத்தில் ஒரு வழிபாடு சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு சிவன் கோயிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த சிவன் கோயிலில் கட்டாயமாக கிணறு அல்லது குளம் இருக்க வேண்டும். சில சிவன் கோயில்கள் பக்கத்தில் ஆறு கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் சரி, தண்ணீர் சார்ந்த சிவன் கோயிலாக அது இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கு விளக்கு போட்டு, நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாத்தி, மனதார உங்களின் நோய் தீர வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். அதோடு, மண்டை வெல்லத்தை அரை கிலோ அளவுக்கு வாங்கி அந்தக் கோயிலில் இருக்கும் கிணறு அல்லது குளத்தில் அதைப் போட்டு விட வேண்டும். அவ்வளவுதான் இந்தப் பரிகாரம்.

இருபத்தியொரு திங்கட்கிழமைகள் தொடர்ந்து மேற்சொன் இந்த வழிபாட்டைச் செய்து, வெல்லத்தை மட்டும் சிவன் கோயில் குளத்திலோ அல்லது கிணற்றிலோ போட்டு வந்தால், நெடுநாட்கள் உங்களைப் பெரிதாக வருத்தி வந்த உங்கள் உடல் உபாதைகள் படிப்படியாகக் குறையும். நோய்களின் தாக்கமும் தீரும்.

இந்த வழிபாட்டை மொத்தம் இருபத்தியொரு வார திங்கட்கிழமைகள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் இதில் முக்கியம். எக்காரணத்தைக் கொண்டும் இந்த பரிகாரத்தைத் தொடர்ந்து செய்வதை நிறுத்தக் கூடாது. இந்த வழிபாட்டைச் செய்வது பெண்களாக இருக்கும் பட்சத்தில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இருபத்தியோது வாரங்கள் தொடர்ந்து செய்ய இயலாது. அதுபோன்ற சமயங்களில் இந்த வழிபாட்டை தவிர்த்து விடலாம். ஆனால், இருபத்தியோரு வாரங்கள் இந்த வழிபாட்டைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.

உடல் உபாதைகளைக் குறைக்கும் அரிய வழிபாடாக இது நமது முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com