கடன் தொல்லை விமோசன பரிகாரம்!

பிரதோஷ வழிபாடு
பிரதோஷ வழிபாடு

தீராத கடன் பிரச்னையால் தவிப்பவரா நீங்கள்? ‘எவ்வளவு பணம் வந்தாலும் கடன் தொல்லை மட்டும் விலகவில்லையே’ என்று புலம்புபவரா நீங்கள்? ஈசனுக்கு மிக உகந்த ருண விமோசன பிரதோஷத்தில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டுப் பாருங்கள். விரைவில் உங்களை விரட்டும் கடன் தொல்லைகள் அனைத்தும் அகலும்.

‘அதென்ன ருண விமோசன பிரதோஷம்?’ என்கிறீர்களா? செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷ வழிபாட்டுக்குத்தான், ‘ருண விமோசன பிரதோஷம்’ என்று பெயர். இந்த பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் முறையே வில்வம், அருகு மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். தவிர, சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால், இந்த வழிபாட்டில் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய கறந்த பசும்பால் மற்றும் இளநீர் போன்றவற்றை வாங்கித் தந்து சிவத் தொண்டு புரியலாம். இந்த வழிபாட்டால் கடன் தொல்லை மட்டுமின்றி, உங்களது ஜாதகத்தில் சர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற எந்த தோஷம் இருந்தாலும், அதனால் உண்டான பாதிப்புகள் அனைத்தும் உங்களை விட்டு நீங்கி விடும்.

சனி பகவான்
சனி பகவான்

தொடர்ச்சியாக கடன் பிரச்னையில் தவிப்பவர்கள் மேற்கொண்டு கடன்கள் ஏற்படாமல் இருக்க, ருண விமோசன பிரதோஷ காலத்திலும், மைத்ர முகூர்த்த வேளையிலும் வாங்கிய கடனை கொடுக்க, மேற்கொண்டு இதுபோன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும். அதேபோல், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போதும், சந்திரன் பலமற்ற நாட்களிலும் கடன் வாங்கக் கூடாது. முக்கியமாக, செவ்வாய்க்கிழமையில் அறவே கடன் வாங்கக் கூடாது. மாறாக, இன்றைய தினத்தில் கடனை அடைப்பது என்பது மிகவும் சிறந்ததாகும்.

பொதுவாக, ஒரு கடன் வாங்குகிறோம் என்றால் அதனை அடைக்க சனி பகவானின் அருள் நிச்சயம் வேண்டும். சனி பகவானின் அனுக்ரஹமின்றி ஒரு கடனை அடைப்பதென்பது நடக்காத விஷயம். ஆகையால், கடன் பிரச்னையில் இருந்து விடுபட சனி பகவான் வழிபாடு அவசியமாகும். அதனால் அவ்வப்போது, திருநள்ளாறு, குச்சனூர், சனிசிக்னாபூர் மற்றும் சென்னை, பொழிச்சலூரில் அருள்பாலிக்கும் வடதிருநள்ளாறு சனி பகவான் திருக்கோயில் போன்றவற்றுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வருவது நலம் தரும் ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com