கணவன் மனைவி ஒற்றுமைக்கு மீன் வளர்ப்பு!

கணவன் மனைவி ஒற்றுமைக்கு மீன் வளர்ப்பு!

“எங்களுக்குள் பெருசா எந்த சண்டையும் வராது. வருகிற சண்டை எல்லாம் முன் கோபம், அவசரம் அல்லது கருத்து வேறுபாடுகளால் மட்டுமே வருகிறது” என்பார்கள் சில கணவன், மனைவியர். பெரிதாக எந்த ஒரு காரணமும் இல்லாமல், சிறிய விஷயங்களுக்காக சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய மன நிம்மதியை இழக்க வேண்டுமா? யாராவது ஒருவர் அமைதியாகச் செல்லலாமே. ‘அவள்தான் செல்ல வேண்டும் என்று இவரும், இவர்தான் செல்ல வேண்டும் என்று அவளும்’ நினைத்தால் செய்வதற்கு ஒன்றுமில்லை.

அமைதியின்மை, நிம்மதியின்மை, குடும்பம், குழந்தைகளுடைய மன ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தால், அந்த சண்டை ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஐந்து நிமிடக் கோபம், ஐந்து மணி நேரமோ அல்லது ஐந்து நாட்களோ கூட நம்முடைய நிம்மதியைப் பறித்துக் கொள்கின்றன. எனவே, இந்த ஐந்து நிமிடத்தை கண்களை மூடி, நீருக்குள்ளே கண்ணீரை விடும் மீனை நினையுங்கள். மீனை நினைத்தால் வரக்கூடிய கோபம் பின்வாங்கி விடுமாம். அதேபோல், ‘அடிக்கடி சண்டை வரக்கூடாது, இனி ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று நினைப்பவர்கள், இருவரும் சேர்ந்து உங்கள் வீட்டில் மீன் தொட்டி இருந்தால் அதற்குத் தீனி போடுங்கள். ‘மீன் தொட்டியில் இருக்கும் மீன்களுக்கு தீனி போட்டா சண்டை வராதா?’ என்று குதர்க்கமாகக் கேள்வி கேட்கக் கூடாது. கணவன், மனைவி இருவர் கைகளாலும் ஒன்றாக சேர்ந்து மீனுக்கு உணவு கொடுத்தால் தம்பதியருக்குள் ஒற்றுமை ஏற்படு0ம் என்பது நம்பிக்கை.

உங்கள் வீட்டில் மீன் தொட்டி இல்லை என்றால், கோயில் குளங்களில் இருக்கக்கூடிய மீனுக்கு பொரி வாங்கிக் கொடுங்கள் அல்லது அதற்கு உரிய தீனியை காசு கொடுத்து வாங்கி தம்பதிகளாக இருவரும் சேர்ந்து போட்டுப் பாருங்கள். அதன் பிறகு உங்களுக்குள் சண்டை வருவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்துவிடும். இதுபோல, தொடர்ந்து வாரம் ஒருமுறையாவது செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை செய்ய முடியாவிட்டால் மாதம் ஒருமுறையாவது செய்யுங்கள் போதும்.

மீனுக்கு தம்பதிகளை சேர்த்து வைக்கும் சக்தி உண்டு. மீனுக்கு உணவைக் கொடுத்தால், மீன் உங்களை வாழ்த்துமாம். மீனுடைய வாழ்த்தைப் பெற்றவர்கள் வாழ்வில் எப்பொழுதும் அன்னோன்யமாக, நெருக்கமாக, மகிழ்ச்சியாக இருப்பார்களாம். மீன் தொட்டி வாங்கி வைத்தால் வீட்டில் நிறையவே நன்மைகள் நடக்கும். மீன் வளர்ப்பவர்கள் இல்லத்தில் பெரும்பாலும் துர் சம்பவங்கள் நிகழ்வதில்லை. பெரிய பெரிய மீன் தொட்டிகள் வாங்க முடியாவிட்டாலும், சிறிய தொட்டிகளில் அழகிய வண்ண மீன்களை வாங்கி வையுங்கள். நீங்கள் எப்பொழுதாவது இறுக்கமாக உணர்ந்தால், உடனே அந்த மீன்களுக்கு தீனி போட்டு அது சாப்பிடுவதையும் விளையாடுவதையும் பார்த்து மகிழுங்கள். இதனால் உங்களுக்கு இருக்கும் கவலை எல்லாம் காணாமலேயே போய்விடும் அதிசயத்தைப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com