பண வரவுக்கு சில யோசனைகள்!

பண வரவுக்கு சில யோசனைகள்!

*பூஜை அறையில் ஏற்றும் காமாட்சி விளக்கோடு இரண்டு நெய் தீபம் ஏற்ற, லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும்.

*வீட்டில் வெள்ளை புறாக்கள் வளர்க்க பணத் தட்டுப்பாடு நீங்கும்.

*சமையல் அறையில் பலவித ஊறுகாய் வைத்திருக்கவும். ஏனெனில், குபேரன் ஊறுகாய் பிரியர் என்பதால் பலவித ஊறுகாய் வைத்திருக்க, குபேர சம்பத்து ஏற்படும்.

*வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்தத் தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜன்ம ஜன்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

*அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அன்றைய பூஜையை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. முதலில் பித்ருக்களை வழிபட்ட பிறகே எந்த பூஜையும் செய்ய வேண்டும்.

*வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. இதனால் லக்ஷ்மி கடாட்சம் வெளியேறி விடும்.

*பொதுவாக, இறை பக்தியில் இருப்பவர்களிடம், அதாவது மஹான்களின் ஆசி பெறுவது புண்ய பலம் சேர்க்கும். இதனால் பண வரவு அதிகரிக்கும்.

*வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை சுண்டலை மகாலக்ஷ்மிக்கு நைவேத்யம் செய்து, நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். இதைத் தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.

*அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவர்கள் கையால் பணம் பெற, லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

*யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு மூன்றில் சுக்ரன் உச்சம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற, அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.

*பசுவின் கோமியத்தில் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும். வீட்டிலும் தெளிக்கவும். இதை 45 நாட்கள் விடாமல் செய்திட, தரித்திரம் விலகி, பணம் வரவு உண்டாகும்.

*முழு பாசிப்பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவை, பசுவுக்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர, பண வரவு பெருகும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com