வேண்டுதலை நிறைவேற்றும் விரலி மஞ்சள் பூஜை!

வேண்டுதலை நிறைவேற்றும் விரலி மஞ்சள் பூஜை!

னதில் நினைத்த வேண்டுதல்கள் நல்லபடியாக நிறைவேற வேண்டுமா? தாயார் மகாலட்சுமியின் திருப்பாதங்களை நம்பிக்கையோடு பற்றிக்கொண்டு, வீட்டில் உள்ள பெண்கள் கீழ்க்கண்ட இந்தப் பரிகாரத்தை செய்யுங்கள். எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் அதை 48 நாட்களுக்குள் நிறைவேற்றி தரக்கூடிய சக்தி வாய்ந்த பரிகாரம் இது. வீட்டில் உள்ள பெண்கள்தான் இந்தப் பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்தப் பரிகாரத்துக்கு விரலி மஞ்சள் கட்டாயம் தேவை. சில இடங்களில் இதை கொம்பு மஞ்சள் என்றும் சொல்லுவார்கள். அந்த விரலி மஞ்சளை 48 என்ற கணக்கில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது முனை உடையாத விரலி மஞ்சளாக இருக்கட்டும். ஒவ்வொரு விரலி மஞ்சளின் மேலே ஒரு குங்குமப் பொட்டு வைத்து விடுங்கள். இந்த 48 விரலி மஞ்சளை ஒரு தட்டில் வைத்து அதை தாயார் மகாலட்சுயின் பாதங்களில் வைத்து விடுங்கள்.

தினமும் அதிகாலை நீராடி முடித்து, பூஜை அறையில் தீபம் ஏற்றி, மகாலட்சுமி தாயாருக்கு இரண்டு ஏலக்காய்களை நைவேத்தியமாக வைக்க வேண்டும். வைத்திருக்கும் 48 விரலி மஞ்சளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து தாயாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். குங்கும அர்ச்சனை செய்வோம் அல்லவா? அதேபோல, ஒவ்வொரு விரலி மஞ்சளாக எடுத்து தாயாரின் பாதங்களில் வைத்து வழிபடுங்கள். ஒவ்வொரு முறை மஞ்சளை தாயார் பாதத்தில் வைக்கும்போதும் உங்களுடைய வேண்டுதலை மனதார ஒருமுறை தாயாரிடம் சொல்ல வேண்டும். (வேண்டுதல் ஒரு வரியில் இருப்பது நன்று.)

றுதியாக தாயாருக்கு கற்பூர ஆராத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பூஜை முடிந்து சிறிது நேரம் கழித்து தாயாரின் பாதத்தில் இருக்கும் மஞ்சள் கொம்புகளை எடுத்து தாம்பூலத் தட்டிலேயே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தினமும் மகாலட்சுமி தாயாருக்கு இந்த விரலி மஞ்சளால் 48 நாட்கள் மேல் சொன்னபடி உங்கள் வேண்டுதலைச் சொல்லி, அர்ச்சனை பூஜையைச் செய்ய வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து பெண்களால் இந்த பூஜையைச் செய்ய முடியாது. தவிர்க்க முடியாத ஒருசில நாட்கள் தவிர, இந்த பூஜையை தொடர்ந்து செய்துவர வேண்டும். தாயாருக்கு நைவேத்தியமாக வைத்த ஏலக்காய்களை பாலில் போட்டு அருந்திவிடலாம் அல்லது பிரசாதமாகவும் சாப்பிடலாம்.

கடைசியாக, 48வது நாள் மகாலட்சுமி தாயாருக்கு முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு நெய் மணக்க பாயசம் நிவேதனம் செய்து, இந்த பூஜையை முடிக்க வேண்டும். தாயாருக்கு தினமும் அர்ச்சனை செய்த 48 விரலி மஞ்சளை ஒரு மஞ்சள் நூலால் கட்டி உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்று அதை தாயாருக்கு மாலையாகப் போட்டு, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்துகொள்ள வேண்டும். இந்த மாலையை மகாலட்சுமி தாயாருக்கு அணிவித்த ஒருசில நாட்களிலேயே நீங்கள் மனதில் நினைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும், குழந்தைகளின் படிக்கும் திறன் அதிகரிக்க வேண்டும் மற்றும் கணவரின் நன்மைக்காக கூட இந்த பரிகாரத்தைச் செய்யலாம். அல்லது உங்களுக்கே நல்ல வேலை கிடைக்க வேண்டும், நல்ல கணவன் அமைய வேண்டும் என்று கூட வேண்டிக் கொள்ளலாம். கடன் சுமை குறைய, வருமானம் அதிகரிக்க என எதுவாக இருந்தாலும் சரி, நம்பிக்கையுடன் 48 நாட்கள் தொடர்ந்து இந்தப் பரிகாரத்தை செய்யும்போது உங்களுக்கான பலன் கை மேல் நிச்சயம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com