சித்தாந்த சைவம்!

சித்தாந்த சைவம்!

சைவ சமயம் என்பது  ஆகமங்களின் அடிப்படையில் உருவானது. ஆனால், சைவம் என்பது ஒன்றல்ல. அதில், பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், பைரவம், வீர சைவம், காஷ்மீர் சைவம் போன்ற பல பிரிவுகள் இருக்கின்றன.  சைவ சித்தாந்தத்தின் தலையாய முடிவுகளில் ஒன்று முப்பொருள் உண்மை எனப்படுவது. மூன்று பொருள்கள் என்றும் அழிவில்லாதவை என்பதே  இதன் பொருள் . அவையாகப்பட்டது, கடவுள், உயிர், உலகம்.  கடவுள் என்பவர் என்றும் அழிவில்லாதவர்.  உயிரானது எண்ணற்ற பிறவிகளை உடையதாகிறது.        

பொருட்களை சேதனம் என்றும் அசேதனம்  என்றும் இருவகையாகப் பிரித்து பேசுவது தத்துவ நூல்களில் மரபு. சேதனத்தை சித்து எனவும் அசேதனத்தை அசித்து அல்லது ஜடம் என்றும் கூறுவர்.   சேதனம் என்பது இயல்பிலேயே உணர்வு உடையது. அசேதனம் என்பது இயல்பிலேயே உணர்வற்றது. அசேதனப் பொருட்களால் ஆன உணர்வற்ற தொகுதி உலகம் எனப்படுகிறது.   இன்பமும் துன்பமும் கலந்த இந்த உலகியல் வாழ்வை தத்துவ நூல்கள் சம்சார சக்கரம் என குறிப்பிடுகின்றன.   

உயிர்களுக்கு அறிவு, இச்சை, செயல் இம்மூன்று ஆற்றல்களும் இயல்பிலேயே உண்டு என்பது சைவ சித்தாந்தக் கோட்பாடு. ஆணவ மலமானது அறிவினை மறைக்கும் போது ஆன்மாவின் இச்சை, செயல் ஆகிய ஆற்றல்களும் தாமாகவே மறைவுண்டு விடுகின்றன.  அறியும் ஆற்றலை ஞானசக்தி எனவும், இச்சையின் ஆற்றலை இச்சா சக்தி எனவும், செயல்திறனை கிரியா சக்தி எனவும் வடநூலார் கூறுகின்றனர்.   

உடலால் மட்டுமே இன்பத் துன்பங்களை அனுபவிக்க தெரிந்த விலங்குகளைக்  காட்டிலும் உள்ளத்தாலும் இன்பத்து துன்பங்களை அனுபவிக்க தெரிந்த மனிதன் மேலானவன்  மலவரி பாகம் என்பது ஆணவ மலத்தின் பரிபக்குவம் அதாவது ஆணவமலம் தன் மறைப்பு சக்தியை பெருமளவு இழந்து நிற்கும் நிலையாகும். ஆணவ மலம் நீங்கப் பெற்ற நிலையில் ஆன்மாவும் இறைவனும் ஒரே பொருள் ஆகிவிடுகின்றனர். இறைவனது கருணைக்கு திருவருள் என்பது பெயராகும்.

சிவம் எனப்படுகிற இறைவனை ஆதாரமாகக் கொண்டுள்ள  சிவனும், திருவருளும்  ஒன்றி உள்ளதாக சைவ சித்தாந்திகள் கூறுகின்றனர்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com