அதிசய அரசமர சுயம்பு விநாயகர்!

அதிசய அரசமர சுயம்பு விநாயகர்!

ற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் அமர்ந்திருக்கும் ஆனைமுகன் அதிசயமாக ஒரு சில திருத்தலங்களில் சுயம்புத் திருமேனியாகத் தோன்றுவது உண்டு.

ஆனால், ஒரே இடத்தில் ஒன்று. இரண்டு அல்ல. ஒட்டுமொத்தமாக இருபத்து இரண்டு சுயம்பு விநாயக வடிவங்கள் தோன்றியுள்ளன. அதுவும் ஒரே ஒரு அரசமரத்தில்! சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள பிரபல பாலவிநாயகர் கோயிலில்தான் இந்த அதிசயம்!

திருக்கோயில் அமைந்தபோது இங்கே, அடர்ந்து கிளை பரப்பி, ஆனைமுகனுக்குக் குடை பிடித்து நின்றது ஓர் அரசமரம். ஆரம்பத்தில் பிள்ளையாருக்குக் குடையாக நின்ற அந்த மரமே படிப்படியாக பிள்ளையாராக மாறிப் போனதுதான் அதிசயம்.

அரச மரத்தின் நடுபாகத்தில் வெளிப்பட்டிருக்கும் வேர் வேழமுகனின் வடிவமாகவே காட்சியளிப்பதைத் தரிசிக்கும்போது வேதனைகள் யாவும் தீர்ந்து விட்டதுபோல் மனம் லேசாகிறது.

செந்தூர விநாயகரின் செம்பவள மேனிபோல் சிவந்த நிறத்தில் திடீரெனத் தோன்றிய சிம்பு வேர்கள், கிரீடம் துதிக்கை, தந்தம் எனக்காட்சி தர ஆரம்பிக்க, வேகமாக தானே உருவானது. நர்த்தன கணபதியாக அவ்வுருவம் அமைய சிலிர்த்துப் போனார்கள் பக்தர்கள். நாளடைவில் சுயம்புவாக அரசமர மத்திய பாகத்துக்கு கீழ் அநேக வடிவங்கள் தோன்றலாயின. ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் இங்குச் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

சென்னை வடபழனி பேருந்து நிலையத்திலிருந்து விருகம்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் உள்ள சாலிக் கிராமம், பரணி காலனியில் அமைந்துள்ளது இந்த அதிசய அரசமர சுயம்பு விநாயகர் திருத்தலம்.

-சௌம்யா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com