இடிதாங்கிகளாக விளங்கும் கோயில் கோபுரங்கள்!

இடிதாங்கிகளாக விளங்கும் கோயில் கோபுரங்கள்!

கோயில் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசம் தங்கம் வெள்ளி செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்டது. நெல், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்காச்சோளம், சாமை ஆகியவை கோபுர கலசத்தில் இருக்கும்.  குறிப்பாக வரகு தானியம் அதில் அதிகமாக இருக்கும். இக்கலசங்களில் கொட்டப்படும் தானியங்களும் உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்கு கொடுக்கின்றன. வரகு மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இயற்கை சீற்றத்தினால் விவசாயங்கள் அழிந்து போனாலும் கூட மீண்டும் விவசாயம் செய்ய கோபுர கலசத்திலிருந்து தானியங்களை எடுத்தும் பயன்படுத்தலாம்.  இந்த தானியங்களின் திறன் 12 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கும். அதன்பின் தானியங்கள் தன் சக்தியை இழந்து விடும். எனவே, 12 வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்குவிழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகின்றது.  மேலும், அக்காலத்தில் தொடர்ந்து மழை பெய்தால் தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போவதால் மீண்டும் பயிர் செய்வதில் சிரமம் ஏற்படும். இந்த உயரமான கோபுரத்தில் நீர் சூழ வாய்ப்பில்லை. எனவேதான் தானியங்களை சேமித்து வைத்தால் அதனை மீண்டும் எடுத்து பயன்படுத்தலாம் என்ற பழக்கமும் இருந்தது.

ரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடிதாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும், அது எத்தனை பேரை காப்பாற்றும் என்பது அதன் உயரத்தை பொருத்தது. அடிப்படையில் கலசங்கள் இடி தாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் 50 மீட்டர் என்றால் 100 மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல்  காக்கப்படுவார்கள். சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலா புறமும் 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவை காத்து நிற்கிறது இது ஒரு தோராயமான கணக்குதான். இதை விட உயரமான கோபுரங்கள் இதைவிட அதிகமான பணிகளை சத்தம் இல்லாமல் செய்துவருகின்றன. அதனால்தான் முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமான எந்த கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது.

ஆனால், இன்று...?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com