ஆயுர்வேத பொங்கல்!

ஆயுர்வேத பொங்கல்!

மிழர் திருநாளாம் பொங்கலன்று தமிழ் மக்கள் அனைவரின் வீடுகளிலும் புத்தரிசியில் பொங்கல் பொங்கி, அதை இறைவனுக்குப் படைத்து பிறகு தாங்களும் உண்டு, தமது வீட்டு வளர்ப்புப் பிராணிகளுக்கும் தந்து உபசரிப்பது நம் தமிழ் மக்களுக்கு உரிய மிகப்பெரிய பண்பாக இருந்து வருகிறது.

பொங்கல் பண்டிகையின்போது பெரும்பாலானவர்களின் வீடுகளிலும் இனிப்புப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் பொங்கி வழிபடுவதே மரபாகும். ஆனால், ஆறு வகை பொங்கல் உண்டென்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அந்த ஆறு வகை பொங்கல்: பரம்மான்னம், ஹரித்ரான்னம், ததியன்னம், கிருசரம், குடோதன்னம், முத்தரன்னம் எனப்படும். இவற்றில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் கிருசரம், குடோதன்னம், முக்தான்னம் ஆகியவையே சமைக்கப்படுகிறது. சரி, இந்த ஆறு வகைப் பொங்கல் சமைக்கப்படும் விதம் குறித்துக் காண்போம்.

பரம்மான்னம்: இது பால் சோறு அல்லது பால் பொங்கல் என அழைக்கப்படுகிறது.

ஹரித்ரான்னம்: மஞ்சள், சீரகம், மிளகு கலந்த சோறு அல்லது பொங்கலாகும்.

ததியன்னம்: இது தயிர் கலந்த சாதம் அல்லது பொங்கல்.

கிருசரம்: பாசிப் பயறு கலந்த சாதம் அல்லது பொங்கல்.

குடோதன்னம்: இது இனிப்புப் பொங்கலைக் குறிப்பதாகும்.

முக்தான்னம்: பாசிப் பயறு கலந்த இனிப்புப் பொங்கல் இதுவாகும்.

இவற்றில், ‘கிருசரம்’ என்பது அரிசியின் பாதியளவு பாசிப் பயறு கலந்து தயாரிக்கும் பொங்கலைக் குறிப்பதாகும். அதேபோல், ‘குடோதன்னம்’ என்பது வெல்லத்தைக் குறிப்பதாகும். அரிசிக்கு மூன்று மடங்கு அதிகமாக பாலும், பாலுக்கு பாதியளவு தண்ணீரும், தண்ணீருக்குப் பாதியளவு வெல்லமும், வெல்லத்துக்குப் பாதியளவு நெய்யும் கலந்து சமைத்து கடைசியில் திராட்சை இட்டு தயாரிக்கப்படும் பொங்கலை குறிப்பதாகும். ‘முக்தான்னம்’ என்பது, அரிசியுடன் மூன்றுக்கு ஒரு பங்கு பச்சைப் பயறு சேர்த்து குடோதன முறை போன்று தயாரிக்கும் பொங்கலைக் குறிப்பதாகும். உடலுக்கு நலம் சேர்க்கும் பொருட்களைக் கொண்டு இவ்வகை பொங்கலை சமைப்பதால் இவற்றை, ‘ஆயுர்வேத பொங்கல்’ என்றும் கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com