மூச்சுப் பயிற்சியாகும் ஸ்ரீராம நாமம்!

ஸ்ரீ ராமபிரான்
ஸ்ரீ ராமபிரான்

வதார புருஷரான ஸ்ரீராமபிரானை விட, அவரது திருநாமமான, ‘ராம’ எனும் சொல்லுக்கு வலிமை அதிகம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்று. அனைத்துக்கும் ஆதியானது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்பது பெரியோர் கருத்து. ‘ஸ்ரீ ராம’ நாம மந்திரத்தை உள்ளார்ந்த பக்தியோடு மூன்று முறை உச்சரித்தாலே, ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பலன் கிடைக்கும். துன்பத்தைத் தீர்த்து இன்பத்தை அளிக்கும்,

‘ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!’

எனும் ஸ்லோகத்தை ஒரு முறை படித்தாலே ஸஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலனைப் பெறலாம் என்று சிவபெருமானே ஸ்ரீராமனின் புகழைப் பாடுகின்றார்.

மூச்சுப் பிரச்னை, இதய நோய்களால் அவதிப்படுவோர் தினசரி இந்த ஸ்லோகத்தை பல முறை கூறிவந்தால், அதுவே ஒரு சிறந்த மூச்சுப் பயிற்சியாக அமைந்து உடலில் உள்ள மேற்கண்ட பிரச்னைகள் விரைவில் அகல்வதை உணரலாம்.

இது தவிர, இந்த ஸ்லோகத்தை முறையாகப் பாராயணம் செய்வதில் ஒரு ஆச்சரியம் அடங்கியிருப்பதைப் பலரும் அறிந்திருக்க வாய்பில்லை. அதாவது, இந்த ஸ்லோகத்தை ஒருவர் முறையாக உச்சரிக்கும்போது தனது ஆட்காட்டி விரலை அவரது மூக்கின் அருகில் வைத்துப் பார்த்தால், அவரது மூச்சுக் காற்று உடலின் உள்ளே செல்வதோ அல்லது வெளியே வருவதோ கிடையாது என்பதை அறியலாம். மேலும், அவரது வாய் வழியாக மட்டுமே சுவாசக் காற்று வெளியே செல்வதை உணரலாம்.

இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை சாதாரணமாக நாம் வீட்டிலோ அல்லது வெளியிலோ, நாம் செய்யும் வேலைகளுக்கு மத்தியிலோ கூட கூறி பயன் பெறலாம். ஆனால், அது பக்திப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com