சங்கடம் தீர்க்கும் சனி மகாபிரதோஷம்!

சங்கடம் தீர்க்கும் சனி மகாபிரதோஷம்!

வ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைக்கு அடுத்து வரும் திரயோதசி திதி தினங்களின் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையான நேரம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. ஆலகால விஷம் அருந்திய ஈசன் இன்றுதான் மயக்கம் தெளிந்து உலகைக் காத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி, பச்சரிசி வெல்லம் நிவேதனம் செய்து வழிபடலாம்.

நாளைய தினம் சனி மகா பிரதோஷம் ஆகும். இந்த நாளில் விரதம் இருந்தால் சகல நன்மைகளை அடையலாம். சனிக்கிழமைகளில் வரும் திரயோதசி திதி, சனி மகாபிரதோஷம் எனப்படுகிறது. பிரதோஷ சிவ தரிசனம் முடியும் வரை உணவைத் தவிர்த்து விரதம் இருக்க வேண்டும். ஒரு சனி மகாபிரதோஷ வழிபாடு, ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷ வழிபாட்டுப் பலனைத் தரவல்லதாகும். சனி மகாபிரதோஷ வழிபாட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு இணையான புகழும் செல்வாக்கும் கிட்டும் என்பது ஐதீகம். இன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்றப் பலனைத் தரவல்லதாகும். சனி பிரதோஷத்தன்று நந்தியை வழிபடுவதால், சனி பகவானால் உண்டாகும் அனைத்துத் துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

நந்தியின் கொம்புகளுக்கிடையில் சிவபெருமான் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால், இன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவபெருமானை தரிசிப்பது சிறப்பு. சனி பிரதோஷ நேரத்தில் அனைத்துத் தேவர்களும் ஈசனின் நடனத்தைக் காண பூமிக்கு வருகை தருவதாக நம்பிக்கை. சனி மகாபிரதோஷத்தன்று ஈசனை தரிசிப்பதால், அனைத்துப் பாவங்களும் விலகி, புண்ணியம் சேருவதோடு, சகலவிதமான செளபாக்கியங்களும் உண்டாகும்.

சாதாரண பிரதோஷ காலத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனி மகாபிரதோஷ காலத்தில் பிரதட்சணம் செய்வதால் 120 வருட பிரதோஷ வரிபாட்டுப் பலனும் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். ஏழரை சனி, அஷ்டம சனியினால் வரும் துன்பங்கள் தீர சனி மகாபிரதோஷ வழிபாடு சிறந்த நிவாரணி. நாளைய தினம் வரும் சனி மகாபிரதோஷம் வளர்பிறையில் வருவது கூடுதல் சிறப்பு. இந்த சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷ நாளில் சிவாலயம் சென்று இறையருள் பெறலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com