மாணவ, மாணவியர் பொதுத் தேர்வில் வெற்றி பெற சிறப்பு ஹோமம்!

மாணவ, மாணவியர் பொதுத் தேர்வில் வெற்றி பெற சிறப்பு ஹோமம்!

Published on

சென்னை, மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பைரவ சாய்நாதர் திருக்கோயில். இந்த வருடம் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள மாணவ, மாணவியரின் கல்வி பயிலும் திறமை மேம்படுத்தவும், படிப்பில் சற்று மந்த நிலை மற்றும் ஞாபக சக்தி குறைவு போன்றவற்றால் பொதுத் தேர்வை எதிகொள்ள அஞ்சும் மாணவர்களின் நலனுக்காக இந்தக் கோயிலில் 12.2.2023 அன்று காலை 7.30 மணிக்கு ஸ்ரீ சாயி ஹயக்ரீவ மூர்த்திக்கு சிறப்பு ஹோமம் ஒன்று நடைபெற உள்ளது.

இந்த ஸ்ரீ ஹயக்ரீவ ஹோமத்தை மாணவர்கள் தங்கள் கைகளாலேயே செய்ய இக்கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹோமம் செய்யும் முறையை வேதம் பயின்றவர்கள் மாணவர்களுக்கு உடனிருந்து சொல்லித் தருவார்கள். ஹோமத்தின் முடிவில் மாணவர்களுக்கு தேர்வு எழுதத் தேவையான எழுது பொருட்களை ஸ்ரீ பைரவ சாயிநாதரின் திருப்பாதத்தில் வைத்து அவரது ஆசியுடன் கொடுக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஹோமத்தில் கலந்துகொள்ள மாணவர்கள் 200 ரூபாயை கட்டணமாகச் செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அக்கோயில் மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் படிப்பில் உள்ள மந்த நிலை, ஞாபக சக்தி குறைவு போன்ற பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெற்று பொதுத் தேர்வை வெற்றிகரமாகச் சந்திக்கலாம். மேலும், ஹயக்ரீவரை வணங்கி வழிபடுவதால் கல்விச் செல்வம், புத்திக்கூர்மை இவற்றோடு பொருள் செல்வத்தையும் பெற்று, வாழ்வின் தடைகள் அனைத்தும் நீங்கி சுபிட்சம் பெறலாம்.

இந்த ஹோமத்தில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவியர், 9176566648 மற்றும் 94459 00072 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

logo
Kalki Online
kalkionline.com