வறுமையும் தரித்திரமும் ஒழியணுமா?

வறுமையும் தரித்திரமும் ஒழியணுமா?

‘வாழ்க்கையில துன்பம் வரலாம்… ஆனா, துன்பமே வாழ்க்கையா இருந்தா என்னதான் செய்ய முடியும்’ அப்படின்னு கஷ்டப்படுபவரா நீங்கள்? அதேபோல், ‘எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் வறுமை மட்டும் என்னை விட்டு ஒழியவே மாட்டேங்குது’ன்னு வருத்தப்படுபவரா நீங்கள்? உங்களோட கஷ்டமும் வறுமையும் ஒழிய அருமையான ஒரு ஸ்லோகம் இருக்குதுங்க.

‘சந்திராம் பிபாஸாம் யஸஸாம் ஜ்வலந்தீம்

ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா முதாராம்

தாம் பத்மினிம் ஸரணமஹம் ப்ரபத்யே

லக்ஷ்மீரி மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே’

இந்த ஸ்லோகத்தோட பொருள் என்ன தெரியுமாங்க? ‘நிலவைப் போன்றவளும், ஒளி நிறைந்தவளும், தேஜோமயமானவளும், தேவர்களாலும் வழிபடப்படுபவளும், கருணை மிகுந்தவளும், தாமரையைத் தாங்கியவளும், ‘ஈம்’ எனும் பீஜாட்சரத்தின் பொருளாகத் திகழ்பவளுமான மஹாலக்ஷ்மியை நான் சரணடைகிறேன். தேவியே என் வறுமையைப் போக்கியருள்வாள்’ அப்படிங்கறதுதான்.

இந்த ஸ்லோகத்தை தினமும் 108 முறை வீதம், 144 நாள் தினமும் சொல்லிட்டு வாங்க. ஜபம் செய்ய உட்காரும்போது கிழக்குப் பார்த்து உட்காருங்க. வடக்குப் பார்த்தும் உட்காரலாம்; தப்பில்லை. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா? எந்த ஜபம் செய்தாலும் கட்டாயமா ஏதாவது நிவேதனம் செய்யணும். அதைச் செய்யாம இருக்கக் கூடாது. இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிச்ச பின்னால, எந்தக் காரணத்துலயாவது நடுவுல நிறுத்தற மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டா, பிறகு அந்தக் குறிப்பிட்ட எண்ணிக்கையை முடிச்சுத்தான் ஆகணும். அப்படியே விட்டுடக் கூடாது. இந்த வழிபாட்டை மட்டும் செஞ்சு பாருங்க உங்களோட வறுமையும் தரித்திமும் கூடிய சீக்கிரமே கண்டிப்பா மறைஞ்சு போகும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com