கோயில் நடை திறக்கக் கோடாரி!

கோயில் நுழைவாயிலும் உற்ஸவ மூர்த்தியும்
கோயில் நுழைவாயிலும் உற்ஸவ மூர்த்தியும்
Published on

- வே.இராமலக்ஷ்மி

லகிலேயே மிகவும் அசாதாரணமாக கோயில் என்றால் அது கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவார்பூவில் அமைந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்தான். 1500 ஆண்டுகள் மிகவும் பழைமையாக இந்தக் கோயில் நடை, வருடம் முழுக்க தினமும் 23.58 மணி நேரம் திறந்திருக்கிறது. அதாவது, தினமும் இரண்டு நிமிட நேரம் மட்டுமே இந்தக் கோயில் சாத்தப்படுகிறது. அது 11.58 முதல் 12 மணி வரை. ஏனென்றால் இந்தக் கோயில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் எப்பொழுதும் பசித்துக்கொண்டே இருக்குமாம்.

இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், கோயில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோயிலைத் திறக்க தந்த்ரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் பசியை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று பக்தர்கள் நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கருவறை கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால் கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

கோயில் தோற்றம்
கோயில் தோற்றம்

ம்சனைக் கொன்ற பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் மிகவும் உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் இருந்த கிருஷ்ண பகவானே இக்கோயில் மூலவர் என பக்தர்கள் நம்புகின்றனர். அபிஷேகம் முடிந்த பின் மூலவரின் தலையை முதலில் உலர்த்திய பிறகு அவருக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும். இந்தக் கோயிலின் இன்னொரு தனிச் சிறப்பு என்னவென்றால் கிரகணத்தின்போது கூட கோயில் நடை மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

ஒரு முறை கிரகணத்தின்போது கோயில் நடை மூடப்பட்டது. கிரகணம் முடிந்ததும் பூஜகர்கள் கருவறைக் கதவைத் திறந்தபோது, கிருஷ்ண பகவானின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்திருந்ததைக் கண்டனர். அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அன்றிலிருந்து கிரகணத்தின்போதும் அக்கோயில் நடை மூடப்படுவதில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் தூங்கும் நேரம் தினமும் 2 நிமிடங்கள் மட்டுமே. அதுமட்டுமின்றி, கோயிலில் பிரசாதம் பெறாமல் பக்தர்கள் எவரும் செல்ல அனுமதியும் இல்லை. தினமும் கோயிலின் நடை மூடுவதற்கு முன்பு பூஜாரி சத்தமாக, ‘இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?’ எனக் கேட்பார். பிரசாதம் பெறுவதில் அனைத்து பக்தர்களும் கண்டிப்பாகப் பங்கு பெற வேண்டும். நீங்கள் இந்தக் கோயிலின் பிரசாதத்தைச் சுவைத்தால் அதன் பிறகு உங்கள் வாழ்வில் பசி என்ற பேச்சுக்கே இடமிருக்காது அருள்புரிவான் இத்தல ஸ்ரீ கிருஷ்ணன். அது மட்டுமின்றி, உங்கள் குடும்பத்திலும் யாருக்குமே உணவுப் பிரச்னை ஏற்பாடாது என்பது நம்பிக்கை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com