டெல்லி எல்லையில் சரக்கு வாகனங்கள் நிறுத்தம்: காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

டெல்லி எல்லையில் சரக்கு வாகனங்கள் நிறுத்தம்: காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!
Published on

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய வாகனங்கள் தவிர்த்து மற்ற சரக்கு வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் சரக்கு லாரிகள் வரிசையாக அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி, நூலகங்கள் மறுஉத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கு வரும் 21-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டெல்லி கவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு டெல்லிக்கு வந்த லாரிகள் டெல்லி குர்கான் எல்லையிலும், திக்கு எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. கேஸ் மூலம் இயங்கும் வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com