டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Indian soldiers hold the National Flag after it is lowered down during the Beating Retreat ceremony in New Delhi on January 29, 2019. - The military ceremony is the culmination of the four-day long Republic Day celebrations and dates back to the days when troops disengaged themselves from battle at sunset. (Photo by MONEY SHARMA / AFP)        (Photo credit should read MONEY SHARMA/AFP via Getty Images)

தலைநகர் டெல்லியில் நாளை: குடியரசு தின விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடு பணிகள் மும்முரமான முறையில் நடைபெற்று வருகின்றது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்;

டெல்லியில் நாளைய குடியரசுதின அணிவகுப்பில் கலந்துகொள்ள கூடிய ராணுவ வாகனங்கள், டாங்குகள் உள்ளிட்டவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள முக்கிய சாலைகளில் மூட்டைகள் கொண்ட தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை நாளை மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.அதிலும் 3 கட்ட பாதுகாப்புகளுடன் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவர். அணிவகுப்பு செல்லக்கூடிய முக்கியமான சாலைகளில் போக்குவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணைராணுவப்படையினர் 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் மற்றும் டெல்லி காவல்துறையினர் 28,000 பேர் பாதுகாப்புப் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆண்டி டிரோன் சர்வைலென்ஸ் மூலமாக டிரோன்கள் பறப்பது கண்காணிக்கப்படுகிறது.

இதைத்தவிர லோ ஃபிளை ஜோனாக டெல்லி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள், சிறிய ரக விமானங்கள் போன்றவை பறப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரோன்கள் மூலமாக குடியரசு தின நிகழ்ச்சிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை வழங்கிய எச்சரிக்கையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்று அதிகமுள்ள சூழலில் உள்ளே வரக்கூடிய பயணிகள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com