தலைநகர் டெல்லியிலுள்ள லக்ஷ்மி நகர் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து ஏ.கே .47 துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு அதிகாரி கூறியதாவது:
இன்று டெல்லி, லக்ஷ்மி நகரில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். அவன் இந்திய நாட்டவருக்கு உண்டான போலி அடையாள அட்டை வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடமிருந்து ஒரு கையெறி குண்டு, ஏகே 47 துப்பாக்கி, மற்றும் இரு சாதாரண கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப் பட்டுள்ளன. அவன்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டது.
–இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது: ஏ.கே. 47 துப்பாக்கி பறிமுதல்!
Other Articles
தமிழக பொறியியல் படிப்புகள்; தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப் பட்டது.
-இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்ததாவது:
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது....
தங்கம் விலை அதிரடி சரிவு: மக்கள் மகிழ்ச்சி!
தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.
–இதுகுறித்து சென்னை தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்ததாவது:
கடந்த ஆண்டு ஏற்பட்ட...
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி; சென்னையில் ஏற்பாடுகள்!
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதன்முறையாக நடத்தப்பட உள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வருகிற செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில...
இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமம் ரத்து!
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் இந்த கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்று நாளை காலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
–இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...