
இன்று குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையிடமும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத் துக்கு வழிவகுக்கும்.
அசுபதி: மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும்.
பரணி: கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள்.
கிருத்திகை 1ம் பாதம்: தொழில் தொடர்பாக எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7, 9
இன்று எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சலும் தடை, தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
ரோஹிணி: உழைப்பு அதிகரிக்கும்
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5
இன்று தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பணவரத்து திருப்திதரும்.
திருவாதிரை: தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்காது. நிதானமாக நடக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பணவரத்து தாமதப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 5
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள்.
புனர்பூசம் 4ம் பாதம்: எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
பூசம்: வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
ஆயில்யம்: தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 7
இன்று எதிலும் திட்ட மிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
மகம்: மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.
பூரம்: வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.
உத்திரம் 1ம் பாதம்: எல்லாவகையிலும் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன் படுத்தி சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எதிலும் சாதகமான பலன் கிடைக்கும்.
ஹஸ்தம்: மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.
சித்திரை 1, 2 பாதங்கள்: கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 6
இன்று மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
ஸ்வாதி: எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
இன்று கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும்.
விசாகம் 4ம் பாதம்: உறவினர்கள் வருகை இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும்.
அனுஷம்: வீண் செலவு கட்டுப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.
கேட்டை: எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 3, 7
இன்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.
மூலம்: வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது.
பூராடம்: வருமானம் கூடும். எந்த வேலையை செய்தாலும் மன திருப்தி உண்டாகும்.
உத்திராடம் 1ம் பாதம்: ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை யோசித்து செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7
இன்று குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள்.
திருஓணம்: மனதில் உற்சாகம் உண்டாகும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4
இன்று கலகலப்பாக பேசி பழகாமல் ஒதுங்கி இருப்பதை தவிர்த்து அனைவரிடமும் இயல்பாக பேசி வருவது வெற்றிக்கு வழிவகுக்கும். மற்றவர்களின் ஆதரவு கிடைக்க செய்யும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
சதயம் 4ம் பாதம்: பல வித குழப்பங்கள் வந்து வந்து போகும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4, 6
இன்று செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின்போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும்.
பூரட்டாதி 4ம் பாதம்: மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.
உத்திரட்டாதி: வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும்.
ரேவதி: வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2, 7