13-11-2022

ஞாயிற்றுக்கிழமை
dina palan
dina palan
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

மேஷம்

இன்று எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

அசுபதி:இன்று எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள்.

பரணி: வீண் பேச்சு கூடவே கூடாது.

கிருத்திகை 1ம் பாதம்:வியாபார ரீதியாக  போட்டிகள் வரலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.

ரோஹிணி:வம்பு வழக்கு கூடவே கூடாது.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும்.

 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்

இன்று வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவாதிரை:வெளிவட்டடரத்தில் மதிப்பு மரியாதை  உயரும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம்

இன்று தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.

புனர்பூசம் 4ம் பாதம்:அரசு விஷயாதிகளில்  நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிக்கவும்

பூசம்:புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

ஆயில்யம்:பிரியமானவர்களிடம்  அடிக்கடி உரையாடுங்கள்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்

இன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.

மகம்:சுபகாரியங்களில் கலந்து  கொள்வீர்கள்.

பூரம்:வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள்.

உத்திரம் 1ம் பாதம்: பங்குதாரர்களை அனுசரித்து போகவும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது.

ஹஸ்தம்:நம்பிக்கைக்கு  உரியவர்களிடம் ஆலோசனைகள் பெற்று காரியங்களில் இறங்கவும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு  கிடைக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்

இன்று மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: இடமாறுதல் கிடைக்கும்.

ஸ்வாதி: அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:  மணமாகாதவர்களுக்கு மணமாகும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்

இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம்.

விசாகம் 4ம் பாதம்: சுபச்செலவுகள் இருக்கும்.

அனுஷம்: குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும்.

கேட்டை:வீடு  வாகனம் மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு

இன்று திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.  குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படும்.

மூலம்:மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த  கவனமாக செயல்படவும்.

பூராடம்: முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உத்திராடம் 1ம் பாதம்: மாணவமணிகளுக்கு உயர்கல்வி  கிடைக்கும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

மகரம்

இன்று உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம் முயற்சி செய்தால் அள்ளலாம்.

திருஓணம்: கலைஞர்கள் விருதுகள் பெறுவார்கள்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்:உங்கள் பராக்கிரமம் வெளிப்படும்.

 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்

இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: செயலில் வேகம் பிறக்கும்.

சதயம் 4ம் பாதம்:அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: அரசியல்வாதிகள் அரசுப்பணியாளர்கள் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் ரசாயனத் துறைகளில் உள்ளவர்கள்

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 7

மீனம்

இன்று எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்:விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள்.

உத்திரட்டாதி: மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள்.

ரேவதி: கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 6

logo
Kalki Online
kalkionline.com