திண்டுக்கல்லில் புதிய கல்லூரி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முதல்வர் ஸ்டாலின் துவக்கம்!

திண்டுக்கல்லில் புதிய கல்லூரி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முதல்வர் ஸ்டாலின் துவக்கம்!

திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தில் இந்து சமைய அறநிலையத் துறை சார்பில் இன்று "அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி"யை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 150 கோடி ரூபாய் செலவில் புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதற்கட்டமாக உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற்று இந்த ஆண்டு 4 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலயத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். அதன்படி சென்னை, கொளத்தூரில் 'கபாலீஸ்வரர் கல்லூரி', நாமக்கல்லில் 'அர்த்தநாரீஸ்வரர் கல்லூரி', திண்டுக்கல்லில் 'பழனியாண்டவர் மகளிர் கல்லூரி' மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 'சுப்ரமணியசுவாமி கல்லூரி' ஆகியவை தொடங்கப்பட உள்ளன.

இந்த கல்லூரிகளில் பி.காம், பிசிஏ. , பி பி ., பிஎஸ்சி., கணினி அறிவியல் ஆகிய நான்கு பிரிவுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தில் இன்று 'அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரி'யை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com