இனிப்பான கேழ்வரகு புட்டு

இனிப்பான கேழ்வரகு புட்டு

Published on

தேவையானவை :-

கேழ்வரகு மாவு 1 கப்

வெல்லத் தூள் அரை கப்

தேங்காய்த் துருவல் அரை கப்

நெய் 3 ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் அரை ஸ்பூன்

உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை:-

கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பின்னர் ஈரமான வெள்ளைத் துணியில், மாவைப் போட்டு, இட்லித் தட்டில் வைத்து வேக விடவும். மாவு வெந்ததும், ஆற விடவும். அத்துடன் வெல்லத் தூள், நெய், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலக்கவும். சுவையான, சத்தான, உடலுக்கு வலிமை தரும் கேழ்வரகுப் புட்டு தயார்

ஜெயா சம்பத், கொரட்டூர்.

logo
Kalki Online
kalkionline.com