ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி!

ஐ.பி.எல். 14-வது கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் ஆட்டம், அபுதாபியில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தாவின்  நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூருவின் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் பெங்களூர் அணியை தோற்கடித்து கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணி, கொல்கத்தா அணியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த வீரர்களும் சோபிக்கவில்லை. இதனால் பெங்களூரு அணி 92 ரன்களில் படுமோசமாக சுருண்டது. வெறும்

93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 10 ஒவர்களிலேயே வெற்றி இலக்கை தாண்டிய கொல்கத்தா அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது.

இதன் மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com