கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்: டி20 உலககோப்பைக்கு பின் அறிவிப்பு?

கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்: டி20 உலககோப்பைக்கு பின் அறிவிப்பு?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, விரைவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பை துறக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் விராட் கோலி தலைமையில் இதுவரை இந்திய அணி 95 போட்டிகளில் விளையாடி 65-ல் வெற்றியும் 27-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 1 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2 போட்டிகளில் முடிவு இல்லை. இருப்பினும், அவரது தலைமையில் ஐசிசி கோப்பை ஒன்றுகூட வெல்ல முடியவில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக அவர் ஒரு போட்டியிலும் சதம் அடிக்கவில்லை. எனவே, தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் விராட் கோலி இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளீல் இந்திய அணியின் கேப்டனாக தொடர்ந்து நீடிப்பார் என தகவல்கள் வெளீயாகியுள்ளன.

கேப்டன் கோலி பதவி விலகும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல் தெரிவிக்கின்றன. தொடக்க ஆட்டக்காரரான ரோகித்சர்மா ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். மேலும், அந்த அணிக்காக 5 முறை கோப்பையை வென்றவர் என்ற பெருமையும் உண்டு.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்காத நிலையில், டி20 உலககோப்பைக்கு பின்னர் அறிவிப்புகள் வெளிவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com