சாக்கோ பர்பி

சாக்கோ பர்பி

தேவையானவை:

ரவை 1/2 கப்

சக்கரை 1/2 கப்

காய்ச்சிய பால் 1 கப்

நெய் 4 ஸ்பூன்

Dairy milk சாக்லேட் (துருவியது) –1/4 கப்

செய்முறை:

வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு ரவையை 3 அல்லது 4 நிமிடம் வறுக்கவும். பின் காய்ச்சிய பால் ர்க்கரை சேர்த்து நெய் கொஞ்சம் விட்டு கிளறவும். துருவிய dairy milk சாக்லேட்டுடன் சூடான பால் கொஞ்சம் சேர்த்து கரைந்ததும் ரவையில் சேர்த்து அடிப்பிடிகாமல் கிளறவும்.ஒரு தட்டில் நெய் தடவி, இதை தட்டில் போட்டு சமமாக பரப்பி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.10 நிமிடம் ஆறவிட்டால் சட்டுன்னு சாக்கோ பர்பி ரெடி.

ஜெயஸ்ரீ நாகராஜன்

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com