சாலையோரக் கடையில் உணவருந்திய பிரேசில் அதிபர்: வைரல் போட்டோ!

சாலையோரக் கடையில் உணவருந்திய பிரேசில் அதிபர்: வைரல் போட்டோ!

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அமெரிக்க உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார், இதனையடுத்து அவர் சாலையோர கடியில் பீட்சா சாப்பிட்ட போட்டோ வைரலாகியுள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில், .நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்துகொள்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் என உலக தலைவர்கள் .நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியும் இந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். அதையடுத்து இன்று பிரதமர் மோடி தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

.இந்நிலையில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள வந்திருந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ.நேற்றிரவு சக அமைச்சர்களுடன் உணவுக்காக விடுதி ஒன்றுக்குச் சென்றிருந்தார். ஆனால், அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அந்த உணவகத்துக்குள் பிரேசில் அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சாலையோர உணவகத்தில் உணவருந்தும் புகைப்படங்கள் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com