சூரிய காந்தப் புயலால் இணைய சேவை பாதிக்க வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

சூரிய காந்தப் புயலால் இணைய சேவை பாதிக்க வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் சூரிய காந்தப் புயலால் இணைய சேவை முற்றிலும் பாதிக்கப்படலாம் என்றும், கடலுக்கு அடியே செல்லும் கேபிள்களில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.ஆய்வின்

அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழக்தின் உதவிப் பேராசிரியர் சங்கீதா அப்து ஜோதி சூரிய காந்தப்புயல் குறித்து ஆய்வு செய்து கூறியதாவது: சூரிய காந்தப் புயலால் உலகில் இன்டர்நெட் சேவை பெருமளவு பாதிக்கக் கூடும். அந்த பாதிப்பு பல மாதங்கள் தொடரும். சூரியனில் இருந்து அதிக அளவில் காந்த துகள்கள் வெளியேறுவதே சூரிய காந்தப்புயல் என்று கூறப்படுகிறது. இவை பூமியின் காந்த கவசத்தால் தடுக்கப்படுவதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், செயற்கை கோள்கள் மற்றும் நீண்ட தூர கேபிள்களை இவை சேதப்படுத்தும்.

இவ்வாறு சங்கீதா அப்து ஜோதி தனது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய காந்தப்புயலால் இணைய பேரழிவு உலகம் முழுவதும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மற்ற விஞ்ஞானிகளூம் எச்சரித்துள்ளனர். ஆனால் இந்த சூரிய காந்த துகள்கள் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை பாதிக்காது என்று தெரிவித்துள்ளனர். இந்த காந்தப் புயலால் அமெரிக்கா ஆசிய நாடுகளுக்கு இடையேயான இணைய தொடர்பு பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com