டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு!

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு!

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகளை தூர்தஷன் மற்றும் வானொலியில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளீயிட்டுள்ள தகவல்:

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டிகளை வானொலி வர்ணனை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் தூர்தர்ஷனிலும் அகில இந்திய வானொலியிலும் ஒலிபரப்பு மற்றும் ஒளீபரப்பு செய்ய திட்டமிடப் பட்டுள்லன.அகில இதன் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அக்டோபர் 23 முதல், அகில இந்திய வானொலியின் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அனைத்து போட்டிகளின் நேரலை வர்ணனையை ஒலிபரப்பும்.

இவ்வாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com