தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு!

தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வானது (teacher eligibility test 2022) ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடங்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று முதல் அனுப்பலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பத்தை இன்று முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை அனுப்பலாம். இதற்கான அதிகாரபூர்வ இணையதளமான https://www.trb.tn.nic.in/ என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.ஆனால்,தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு இத்தேர்வுக்கான கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய TRB யின் https://www.trb.tn.nic.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடலாம்.

-இவ்வாறு தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com