நகைக்கடன் தள்ளுபடி இல்லாதோர் பட்டியல்: அரசு அறிவிப்பு!

நகைக்கடன் தள்ளுபடி இல்லாதோர் பட்டியல்: அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் திமுக தேதல் வாக்குறுதியாக கூட்டுறவு வங்கிகளீல் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த சட்டப்பேரவையில் இதை முதல்வர் மு..ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடிக்கு யாரெல்லாம் தகுதியில்லை என்பதற்கான பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழகத்தின் அனைத்து கூட்டுறவு மண்டல மேலாண் இயக்குநர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கூட்டிறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு அதிகமாக நகைக்கடன் பெற்றுள்ளனர். இது தொடர்பான ஆதாரங்கள் ஆதார் எண் மற்றும் ரேசன் கார்டு தகவல் அடிப்படையில் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு
விதியை மீறி 5 சவரனுக்கு மேல் நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடன் தொகையை வசூலிக்க வேண்டும். கடன் தவணையை கட்டத் தவறியவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com