நிதியமைச்சர் கையில் 2 வாட்ச்கள்: சென்டிமென்ட் காரணம்!

நிதியமைச்சர் கையில் 2 வாட்ச்கள்:  சென்டிமென்ட் காரணம்!

தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தன் கைகளில் இரண்டு கைக்கடிகாரங்கள் கட்டியிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.

இந்நிலையில் தான் இரண்டு கைக்கடிகாரங்கள் கட்டியிருப்பதற்கான காரணத்தை நிதியமைச்சர் விளக்கியதாவது:

நான் கட்டியிருக்கும் கைக்கடிகாரங்களில் ஒன்று என் தந்தைக்கு அவருடைய தாத்தா கொடுத்தது.தாதை என் தந்தை 30 வருடங்களுக்கு முன்பு எனக்குப் பரிசளித்தார். அந்த வாட்ச் ஓடவில்லை என்பதால் அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்று ரிப்பேர் செய்து பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய மற்றொரு கையில் கட்டியிருக்கும் கறுப்புநிற கைக்கடிகாரம் ஆப்பிள் ஃபிட்பிட் வாட்ச். இதனை தன்னுடைய ஆரோக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை அறிந்து கொள்ள பயன்படுத்துகிறேன். மேலும் இந்த ஆப்பிள் வாட்ச் மூலமாக போன் பேச முடியும். பாடல் கேட்கலாம். அவசமாக போன் அழைப்புகள் வந்தால் இதன் மூலம் பதில் கூற முடியும். எனவே இது இன்றைய சூழலுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்

சமீபத்தில் இவர் இரண்டு லேப்டாப்களை எடுத்துச் சென்றதற்காக சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு பிறகு அதிகாரிகள் மன்னிப்பு கேட்ட விவகாரம் குறிப்பிடத்தக்கது

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com