பாமக எம்.பி அன்புமணி மகள் திருமண வரவேற்பு: முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைப்பு!
பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் தனது மகளின் திருமண வரவேற்பிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
பாமக இளைஞரணித் தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த திருமணத்துக்கு நெருக்கமான உறவினர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் நடக்க உள்ள இத்திருமண வரவேற்பு விழாவிற்காக பல்வேறு அரசியல் தலைவர்களை அன்புமணி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் தனது மகளின் திருமண வரவேற்பிற்கு மனைவியுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பில் டாக்டர். ராமதாஸின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் விமர்சித்தார். இதில் அரசியல் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.