பெட்ரோல் போட தடுப்பூசி சான்றிதழ் அவசியம்: வேலூர் ஆட்சியர் உத்தரவு!

பெட்ரோல் போட தடுப்பூசி சான்றிதழ் அவசியம்: வேலூர் ஆட்சியர் உத்தரவு!

பெட்ரோல் நிலையத்திற்கு வரும் அனைவரும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, பெட்ரோல் நிரப்ப வேண்டும் என வேலூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது இந்நிலையில், வேலூரில் பெட்ரோல் நிலையத்திற்கு சென்ற ஆட்சியர் குமரவேல் பாண்டியன், அங்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களா என ஆய்வு செய்தார்.

அப்போது சிலர் தடுப்பூசி செலுத்தாததால், பெட்ரோல் நிலையத்திலேயே முகாம் அமைக்கப்பட்டு, அங்கு வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, பெட்ரோல் நிலையத்திற்கு வரும் அனைவரும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, பெட்ரோல் நிரப்ப வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com