யோகி ஆதித்யநாத் சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்!

யோகி ஆதித்யநாத் சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் சாதனை விளம்பரத்தில் கொல்காத்தாவில் உள்ள மேம்பாலம் படம் இடம்பெற்றது சர்ச்சையாகி உள்ளது

உத்தர பிரதேச அரசின் 5 ஆண்டுகால சாதனையாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான விளம்பரத்தில், கொல்கத்தாவில் உள்ள மேம்பாலம் வளர்ச்சியின் அடையாளமாக காட்டப்பட்டு இருந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ்சின் மம்தா பேனர்ஜி அரசால் கட்டப்பட்ட மேம்பாலத்தை உத்தரபிரதேசத்தில் பிஜேபியின் வளர்ச்சி பணிக்காக காட்டுவதா என பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் மேற்கொண்ட மாற்றம் என்பது இப்படி புகைப்படங்களை திருடி உரிமை கொண்டாடுவதே என்று திரிணாமுல் காங்கிரசின் பொதுச் செயலாளர் அபிஷேக் பேனர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில அரசின் விளம்பரத்தில் ஏற்பட்ட தவறுக்கு, தங்கள் பத்திரிகையின் விளம்பர பிரிவுதான் காரணம் என்று அந்த ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com