11.7 லட்சம் அகல்விளக்குகள்: உஜ்ஜயினி கோயிலில் ஏற்றி கின்னஸ் சாதனை!

11.7 லட்சம் அகல்விளக்குகள்: உஜ்ஜயினி கோயிலில் ஏற்றி கின்னஸ் சாதனை!

உஜ்ஜயினி மகா காளேஸ்வரர் கோவிலில் 11 லட்சத்து 71 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜனியில் உள்ள பிரசித்தி பெற்ற மஹாகாளேஸ்வரர் கோவிலில் நேற்று மகாசிவராத்திரியை முன்னிட்டு 11-7 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. சிவ ஜோதி அர்ப்பணம் மகோத்சவம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் 11 அகல் விளக்குகள் ஏற்றி துவக்கி வைத்தார்.

அதையடுத்து பகதர்களும் புரோகிதர்களும் இணைந்து 11 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றினர். இந்நிகழ்ச்சியை கின்னஸ் குழுவினர் 5 பேர் வந்திருந்து நேரில் பார்வையிட்டு அங்கீகரித்தனர். அதையடுத்து இந்நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com