ஊழியர்களுக்கு இனி வாரச் சம்பளம்: இந்தியா மார்ட் அறிமுகம்!

ஊழியர்களுக்கு இனி வாரச் சம்பளம்: இந்தியா மார்ட் அறிமுகம்!

இந்தியா மார்ட் நிறுவனம் முதல்முறையாக தன் நிரூவனத்தில் பணீயாற்றும் ஊழியர்களுக்கு மாத சம்பளத்துக்குப் பதிலாக வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ளது.

பொதுவாக கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்த ஊழியர்கள் போன்றோருக்கு வார சம்பளம் , தினசரி சம்பளம் போன்ற்வை வழங்கப் படுகிறது. ஆனால் இந்தியா மார்ட் போன்ற பெரிய நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் வார சம்பள முறையை அமல்படுத்துவது நாட்டில் இதுவே முதல் முறை .

இதுகுறித்து இந்தியா மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிறுவனருமான தினேஷ் குலாதி தெரிவித்ததாவது;

மாத சம்பளத்துக்கு பதிலாக ஊழியர்களுக்கு வார சம்பளம் அளீப்பது அவர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்று கருதுகிறோம். இதன்மூலம்  சரியான திட்டமிடலுடன் நிதி நெருக்கடி இல்லாமல் வாழலாம் என்று கருதியே இப்படி முடிவெடுத்துள்ளோம்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியா மார்ட் நிறுவனத்தின் இந்த முயற்சி அந்நிறூவனத்தில் மட்டுமல்லாமல் வெளியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து மற்ற முன்னணி நிறுவனங்களும் இதேமுறையை பின்பற்ற வாய்ப்பு உள்ளதாகக் கருதப் படுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com