
தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் முன்பு நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, மீண்டும் சட்டப்பேரவையில் அதே தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கும் வகையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் நீட் தேர்வு விலக்குக்கான மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.
அப்போது நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தில் பாஜக எம்.எல். ஏ நயினார் நாகேந்திரன் ''தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜனின் குழு அறிக்கையை அவமானப்படுத்தும் வகையில் ஆளுநர் கருத்து கூறவில்லை'' என பேசினார். இதையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு
சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவின் மீது பேச வாய்ப்பளிக்கவில்லை எனக் கூறி பாஜக வெளிநடப்பு செய்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக உறுப்பினர்கள் ''
நீட் தேர்வு சமூக நீதியை காத்திருக்கிறது. அனைத்து மாணவர்களும் சமூகநீதியுடன் பயில நீட் தேவை என்பதே மத்திய அரசின் நிலைப்பா'' என்று கருத்து தெரிவித்தனர்.