உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல்: 58 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு!

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல்: 58 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று  தொடங்கியது.

நாட்டில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான  சட்டப்பேரவைத் தேர்தல் இன்றுமுதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று  மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உத்தரபிரதேசத்திலுள்ள 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

கடந்த தேர்தலில் இந்த 58 தொகுதிகளில் 53-ல் பாஜக வெற்றி பெற்றது என்பது குறீப்பிடத்தக்கது.

இந்த 58 தொகுதிகளிலும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப் பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com