கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணம்: இறப்புக்கு முன் அவர் அறைக்குச் சென்ற 4 பெண்களின் சிசிடிவி காட்சிகள்!

கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணம்: இறப்புக்கு முன் அவர் அறைக்குச் சென்ற 4 பெண்களின் சிசிடிவி காட்சிகள்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தாய்லாந்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது அறைக்கு 4 பெண்கள் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, தான் தங்கியிருந்த விடுதியில் மார்ச் 4-ம் தேதியன்று உயிரிழந்தார். மாரடைப்பால் காலமானதாக சொல்லப்பட்ட அவரது இறப்புக்கு பலரும் இரங்கலும் அவர மரணத்தில் சந்தேகமும் தெரிவித்தனர்.இந்நிலையில் அவரின் மரணத்தில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்றன.

இந்நிலையில் ஷேன் வார்னே இறப்பதற்கு முன்னதாக 4 பெண்மணிகளை அவர் அழைத்தது சிசிடிவி காட்சிகள் மூலம்  தெரியவந்துள்ளது. மார்ச் 4-ம் தேதியன்று மதியம் 1.30 மணியளவில் வெளியில் சென்றுவிட்டு அறைக்கு திரும்பிய வார்னே, மசாஜ் செய்யும் 4 பெண்களை வரச்சொல்லியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த மசாஜ் பெண்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வார்னேவுடன் இருந்துவிட்டு மதியம்  2.58 மணிக்கு வெளியேறிய சிசிடிவி காட்சிகளை  போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்த அறையிலிருந்த ரத்தகறையையும் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஷேன் வார்னே இயற்கையான முறையில் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com