நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரத்திலிருந்து போட்டியிடத் தேர்வான அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 36-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜானகிராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைத்து அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பாக 51 வேட்பாளர்களை  அதிமுக துணை ஒருங்கிண்னைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் ஜானகிராமன் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மிரட்டல் காரணமாக தான் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது தொலைபேசி எண்ணை ஆராய்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அதிமுகவினர் சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசாரின் தலையீட்டின் பேரில் சாலை மறியல்காரகள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப் பட்டது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com