10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வுமையம்!

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வுமையம்!

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் அறிக்கையில் தெரிவித்ததாவது:

வளிமண்டல மேலடுக்குசுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (அக்டோபர் 16) மிக பலத்த மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், ஈரோடு , கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

-இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com